தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் – வரிகள்
27 அக்டோபர், அன்று நடைபெற்ற முதல் மாநாட்டில் வெளியிடப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல்.
வெற்றி வாகை எனத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வாரியாக முதல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன் பாடல் வரிகள் இதோ உங்களுக்காக..
பாடல் – வரிகள்:
வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் இதோ
அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ
தமிழ் தாயின் பிள்ளை தலைச்சன் பிள்ளை இதோ
உழைக்கும் இனத்தின் விளைச்சல் ஏதோ
வெற்றி வெற்றி வெற்றி
வாகை வெற்றி வெற்றி
தமிழ் வணக்கம் அனைவருக்கும் புதுசரித்திரம் இனிபிறக்கும்
போர் துவக்கும் யார் தடுத்தும் இது நடநடவென நடக்கும்.
பறை முழுங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலை நிமிர்த்தும்
இன விடுதலை இனி சுவைக்கும் ஒளி நிரந்தரம் என நிலைக்கும்
நில்லாமல் போராடு வெல்லும் வரை இல்லாமை இல்லாது செல்லும் வரை
துப்பார்க்கு துப்பாய் தூவும் மழை
நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
ஐயா,
வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
வாகை வாகை வாகை வெற்றி தமிழ் வாகை
யானை யானை இது இரட்டைப்போர் யானை
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாம், பகுத்தறிவு படைகளும் தந்தை பெரியாரையும் பார் போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீர தமிழ் மங்கை வேலுநாச்சியாரை மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாவை நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று மத பாலின பாகுபாடு இல்லாத, சமத்துவ சமுதாயம் உண்டாக்க, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் அதாவது நம்ம தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க நான் வரேன்
வெற்றி வெற்றி வெற்றி
வாகை வெற்றி வெற்றி
கொள்கை தலைவர்கள் யார்.. கொள்கை வேர்தன்னை பார்
கொள்கை தலைவர்கள் யார் கொள்கை வேர்தன்னை பார்
மொழி எழுந்திட தரை விழுந்திட குருதியில் மன உறுதியும் பெற
மதம் இன மொழி பாலினமது சமம் என்ற புதுயுகம் பிறந்திட
நீர் மருத்துவம் காற்று உணவோடு கல்வி உலக தரமடைந்த
அறிவியலோடு அழகிய தமிழ் நாடு எனும் புகழ் வானுயர்ந்திட
நமது உரிமை நமது பெருமை கரங்கள் இணைய மாறும் நிலைமை
மண் பயனுற பெண் பயனுற இத்தலைமுறை இத்தொழில் பெற
வெற்றி தலைவன் வழியில் நித்தம் செல்வோம்
கொள்கை தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்
மொழித்தியாக முன்னோரை கொண்டாடவே
மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
விடுவோம் உழைப்போம் நமக்காகவே
இலக்கே நமக்கே ஜெயம் நாளையே
தமிழக வெற்றிக்கழகம்
எதிர்காலம் அமைக்கும் கழகம்
தமிழக வெற்றி கழகம்
தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்
நல்வாக்கும் உணவே நல்லாட்சி நமதே
முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே
நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே
முன்னேற்றம் வருதே கொண்டாட்டம் தருதே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளிர்
புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்.
#TvkIdeologySong
#TamilagaVettriKazhagam