விமான நிலையங்களில் உதான் யாத்ரி கஃபே நியாயமான விலையில் உணவுகள் விரைவில்
டிசம்பர் 22, கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் “உதான் யாத்ரி கஃபே” தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (AAI ) அறிவித்தது.
விமானப் பயணிகளுக்கு நற்செய்தி!
இது மட்டும் வெற்றியடைந்தால், இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நிர்வகிக்கப்படும் மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இந்த சிற்றுண்டி அல்லது ஓட்டலில் டீ, காபி, தண்ணீர் பாட்டில்கள், மற்றும் சிற்றுண்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் வழங்கப்படும்.
சாதாரணமாக விமான பயணத்தின்போது டீ குடிக்கவேண்டும் என்றாலே பயமாக இருக்கும், அவ்வளவு குடுத்து குடிக்கனும்மா என்று நகர்ந்த காலங்கள் இன்றும் உண்டு . சற்று சிந்தித்து பார்க்கும்போது இது போன்று உதான் யாத்ரி கஃபே நியாயமான விலை கடைகள் வரும்போது உண்மையிலே பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
#UdaanYatriCafe
#UdaanYatriCafeTN