செம்புலத்துப் படைப்பாளி திரு. கண்மணி குணசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
அரியலூரில் படைப்பாளிக்கு பாராட்டு விழா!
நம் அரியலூர் மண்ணில் எழுத்தாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா இலக்கிய நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அதற்கான முதல் விதையாக மருதையாறு இலக்கியக்கூடல் மற்றும் தமிழ்க்களம் அமைப்பு ஏற்பாட்டில் நாளை 31/10/2020, சனிக்கிழமை மதியம் 03:00 மணி அளவில் அரியலூர் நகரில் நடுநாட்டு நாயகன், செம்புலத்துப் படைப்பாளி திரு. கண்மணி குணசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.
நாள்: 31/10/2020, சனிக்கிழமை, நேரம்: மதியம் 03:00 மணி,
இடம்: குளஞ்சியப்பா போட்டித் தேர்வு மையம், சபரி டிஜிட்டல் மேல்மாடி, அரியலூர்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருது, நடுநாட்டுச் சொல்லகராதி என்னும் படைப்புக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது, கலைஞர் பொற்கிழி விருது, கி.ரா. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரால் வழங்கப்படும் கி.ரா. விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
செம்புலம் என அழைக்கப்படுகிற நெய்வேலி, விருத்தாச்சலம், வடலூர், பண்ருட்டி பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வியலை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, இப்பகுதியின் தொன்மங்களை, வட்டார வழக்கின் அழகியலுடன் தன் படைப்புகள் வழியே ஆவணப்படுத்தி வரும் நம் சமகாலத்திய படைப்பாளி மதிப்புமிகு ஐயா திரு. கண்மணி குணசேகரன் அவர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி போன்றவை ஐயாவின் குறிப்பிடத்தகுந்த நாவல்கள். உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை போன்ற குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். சமகால தமிழலக்கியத்தில் “அஞ்சலை” புதினம் தமிழின் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
ஐயாவின் வந்தாரங்குடி அனைவரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக நம் அரியலூர் மக்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறோம்.
கிண்டிலில் #வந்தாரங்குடி.
ASIN : B08KJ89N4M
நூல் குறிப்பு: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு வந்தாரங்குடியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய இம்மண்ணுக்காக வாழ்வுரிமைக்காக போராடிய மக்களது உணர்வுகளின் போராட்டத்தினை இயல்பாய் படம் பிடித்துக் காட்டியது போல உருவெடுத்துள்ளது கண்மணி குண்சேகரனின் இந்த நாவல்.
அரியலூர் மாவட்ட ஆளுமைகள், வாசகர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
+91 9942766830,
+91 9843427724
அழைப்பின் மகிழ்வில்,
மருதையாறு இலக்கியக்கூடல், தமிழ்க்களம் அமைப்பு, அரியலூர் மாவட்டம்.