நெய்வேலி விமான நிலையம் தயார் விமானம் விரைவில் பறக்கும் – மத்திய அரசு
நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி தமிழ்நாட்டில் விமான நிலையங்களை அதிகரிப்பதற்கு, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்க்கு நெய்வேலி மற்றும் வேலூர் விமான நிலையங்களின் மேம்பாடு நிறைவடைந்துள்ளதாகவும், உரிமம் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆகா நமது ஊருக்கு அருகில் விமானநிலையம் வரைவது மகிழ்ச்சியே. பல ஆண்டுகளாக ரயிலுக்காக எஞ்சியிருக்கும் நமது ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதிக்கு இந்த செய்தி வரவேற்கதக்கது.
இதன் மூலம் நமது பகுதில் தொழில் வறட்சிக்கு புதிய பாதை வகுக்கும் என்று நம்பப்போகிறோம்.
நெய்வேலி விமான நிலையம் – கூகிள் மேப்.