நன்றி நன்றி நன்றி
அனைவருக்கும் வணக்கம்,
இக்கட்டான கொரானா காலத்திலும் நமது ஜெயங்கொண்டசோழபுரம் நகராட்சி ஊழியர்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மிகவும் திறம்பட செயல்பட்டு நமது ஜெயங்கொண்ட சோழபுரத்தில் கொரானா இல்லா நகராட்சியாக தொடர்ந்து மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதனை நிலைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஜெயங்கொண்டசோழபும் இணையதளம் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் கூறிக்கொள்கிறோம்.
நமது நால்ரோடு பகுதியில் முகாம்கள் அமைத்து காவல்துறை மற்றும் நகராட்சி துறையினருடன் பல கல்லூரி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அரும்பாடுபட்டு கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
பொது மக்களாகிய நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன் நாமும் தனிநபர் இடைவெளி கடைபிடித்து கொரோனா பரவாமல் தடுக்க வேண்டுகிறோம்
#அரியலூர் – அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பசியால் வாடக்கூடாது என அவர்கள் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீடு தேடி சென்று கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…