ஆடித் திருவாதிரை – மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாள்
இன்று (5/8/2021) மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை.
இந்தியத் தொல்லியல் துறை திருச்சி வட்டம் கண்காணிப்பாளர் திரு. அருண்ராஜ் அவர்கள் அத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உடன் கூட்டத்தாரோடு கங்கைகொண்டசோழீசுவரத்தில் மாமன்னன் இராசேந்திரச்சோழன் திருவுருவப் படத்திற்கு ஆடித்திருவாதிரைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மலர்த் தூவி வணங்கி மாலை அணிவித்தார்.
இவ்விழாவை இராசேந்திரச்சோழன் அரியணை ஏறிய ஆயிரமாண்டான 2014 – முதல் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழுமமும் இவ்வூர் மக்களும் இருநாள் விழாவாக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
கொரானா பெருந்தொற்று இடர்பாட்டால் இவ்வாண்டு இவ்விழா தவிர்க்கப்பட்டு இராசேந்திரச்சோழன் திருவுருப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தல் கங்கைகொண்டசோழீசுவரருக்கு நன்னீராட்டல் உணவளித்தல் என சுருக்கப் பட்டுள்ளது.
அலைகடல் நடுவேப் பலகலம் செலுத்திக் கங்கையும் கடாரமும் ஈழமும் கொண்டு சிங்காதனத்திலிருந்து தென்கிழக்கு ஆசியாவை ஆதிக்கம் செய்த செம்பியர்க்கோன் இராசேந்திரச்சோழனை நினைவு கூறும் ஆடித்திருவாதிரை நாளைக் கொண்டாடுவோம்.
- இரா.கோமகன். கங்கைகொண்டசோழபுரம்.
#adithiruvathirai
#gangaikondacholapuram
#Rajendracholan
#cholahistory